ரஜினியிடம் ஆசி பெற்ற இயக்குநர் ஷங்கரின் மகள்..!

 
Aditi-Rajini

‘விருமன்’ படத்தில் நாயகியாக அறிமுகமாகும் ஷங்கரின் மகள் அதிதி, ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் படம் ‘விருமன்’. இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. ‘விருமன்’ படத்தின் பூஜை முடிந்து, செப்டம்பர் 18-ம் தேதி முதல், தேனியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் மகள் நாயகியாக அறிவிக்கப்பட்ட அன்று, பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பூஜையிலும் அதிதி கலந்து கொண்டார். அங்கு ராஜமெளலி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தற்போது ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் அதிதி ஷங்கர். ரஜினியுடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பதிவில் அதிதி கூறுகையில், “நேற்று விசேஷ நாளான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தலைவர் ரஜினிகாந்த் சாரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


 

From around the web