தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ஓடிடியில் வெளியாகிறது! அதிகாரபூர்வ அறிவிப்பு!

 
தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ஓடிடியில் வெளியாகிறது! அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவர இப்படம் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. சிறு பட்ஜெட் படங்கள் முதல் பெரிய நடிகர் நடித்துள்ள படங்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டன.

இப்படம் ஏற்கனவே வெளியிட்டிற்கு தயாரானபோதும் கொரோனா பரவலால் தாமதமானது. இதனால் சூரரைப் போற்று படம் போல ‘ஜகமே தந்திரமும்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் அப்போது மறுத்தார்.

இந்நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 18-ம் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web