தனுசின் 3 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்

 
Dhanush

தனுஷ் நடித்துள்ள அந்த்ராங்கி ரே, மாறன் ஆகிய 2 படங்களையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது.

தனுஷ் அந்த்ராங்கி ரே என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கி உள்ளார். இதில் அக்ஷ்ய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடித்துள்ளனர். அந்த்ராங்கி ரே படம் தமிழிலும் வருகிறது. தமிழ் பதிப்புக்கு கலாட்டா கல்யாணம் என்ற பெயரை வைக்க பரிசீலிக்கின்றனர்.

சிவாஜி கணேசன் நடித்து 1968-ல் கலாட்டா கல்யாணம் என்ற படம் வெளியானது. அதே பெயரை தனுஷ் படத்துக்கு சூட்ட முயற்சி நடக்கிறது. ஏற்கனவே சிவாஜியின் திருவிளையாடல் படம் பெயரில் தனுஷ் படம் எடுத்தபோது சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திருவிளையாடல் ஆரம்பம் என்று மாற்றினர்.

பின்னர் சிவாஜியின் கர்ணன் பட பெயரிலும் தனுஷ் படம் வந்தது. தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியானது. மேலும் தனுஷ் நடித்துள்ள அந்த்ராங்கி ரே, மாறன் ஆகிய 2 படங்களையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது தி கிரே மேன் ஹாலிவுட் படமும் ஓ.டி.டி.யில் வெளியாகிறது. தற்போது தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

From around the web