ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளருடன் தனுஷ் மோதல்!

 
Dhanush-Sashikanth

தனுசுக்கும் தனக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக ‘ஜகமே தந்திரம்’ படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் கொரோனா ஊரடங்கால் ஜூன் 18-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முயற்சி நடந்தபோதே தனுஷ் ட்விட்டரில், “திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று பதிவிட்டு எதிர்த்தார்.

அவரது எதிர்ப்பையும் மீறி படம் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் தனுசுக்கும் தனக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போதும், “தனுசும், நானும் 10 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். ஆனால் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிடுவதால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படம் தியேட்டரில் வந்தால் அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் வணிகரீதியாக அதிக பொருட் செலவில் எடுத்த படத்தை ஒரு வருடமாக கையில் வைத்து இருப்பதால் வட்டி சுமை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வெளியிடாமல் இருந்தால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் ஓடிடியில் வெளியிடுகிறோம்” என்றார்.

From around the web