கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

 
ARRahman

இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி அச்சுறுத்தலையும், நிறைய உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதை தடுப்பதற்காக தமிழக அரசும், சுகாதார துறையும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.

திரைத்துறை பிரபலங்கள் பலரும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், இசைபுயல் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தான் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகன் ஏ.ஆர். அமீனுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள அவர், கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டேன், நீங்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.

A post shared by ARR (@arrahman)

From around the web