நம் உறவுக்கும், என்றும் வயதில்லை வாழ்த்துக்கள்டா... இளையராஜாவுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து!

 
Ilayaraja-Bharathiraja

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா தனது 78-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் ரசிகர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தனது நீண்ட கால நண்பரான இளையராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

உனக்கும்,
உன் இசைக்கும்,
நம் உறவுக்கும்,
என்றும் வயதில்லை
வாழ்த்துக்கள்டா. இளையராஜா

உயிர்த் தோழன்
பாரதிராஜா.

என்று பதிவிட்டுள்ளார்.


 

From around the web