அன்றே வாழ்த்து சொன்னேன்!  இயக்குனர் பார்த்திபன் ட்வீட்!

 
அன்றே வாழ்த்து சொன்னேன்! இயக்குனர் பார்த்திபன் ட்வீட்!

அன்றே மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று வாழ்த்து தெரிவித்தேன் என்று இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

”இன்று...இதோ...இப்போது உதிக்கும் சூரியன், புதிய சூரியனல்ல... உதய சூரியன். நீண்ட காலம் ஆண்ட, பத்தாண்டு பொறுமை சின்னத்தின் முதல்வராக ஆட்சி புரிந்தவர் இனி, இனிய தமிழக முதல்வராக!வாழ்த்துகள் திமுகவின் அபரிமித வெற்றிக்கும்,மாண்புமிகு ‘உதய்’சூரியனுக்கும்!

திரு மு க ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல,நானும் முதல்வனே!!! கோவையில் இன்றைய முதல்வருக்கு அன்றே “அடுத்துத் தாங்களே”-என மஞ்கள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன் !” என்று ட்வீட் செய்துள்ளார் இயக்குனர் ஆர்.பார்த்திபன்.

மேலும், ”திரு கமல் அவர்களின் வெற்றி என்பது.... வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல்,வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே!!!” என்று கமல் ஹாசனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

பொதுவாக என்மனசு தங்கம் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் பார்த்திபன் நடித்து இருந்தார்.


 

From around the web