சிபிராஜின் ‘மாயோன்’ டீசர் வெளியீடு

 
Maayon

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

புதுமுக இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாயோன்’. இதில் கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரிஷ் பெரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை டபுள் மீனிங் புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் தயாரித்து, திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.

மர்மங்கள் நிறைந்த திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மாயோன் படத்தின் விறுவிறுப்பான டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web