நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தொலைபேசி அழைப்பால் பரபரப்பு!!

 
Ajith

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மாலை 6.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து உடனடியாக போலீசார் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு சென்றனர்.

அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். அவரது திருவான்மியூர் இல்லத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் அவர் ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் தங்கி வருகிறார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கூட அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதே போல் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து போலீசார் விசாரித்ததில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது மிரட்டல் விடுத்த நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web