பாலியில் புகார்... பிரபல பாலிவுட் நடிகையின் பாதுகாவலர் அதிரடி கைது !!

 
Kangana-kumar-Hedge

திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலரை போலீசார் கைது செய்தனர்.

தேசிய விருதுபெற்ற பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் திரைப்படத்தில் நடிகையாக நடித்துள்ளார். கங்கனா தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடனும் பிரதமர் மோடியின் கருத்துகளை ஆதரித்து வருகிறார்.

நடிகை கங்கனாவுக்கு எதிராக ஒருசிலர் புகார் அளித்தனர். இதனையடுத்து அவருக்கு மத்திய அரசு சார்பில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலராக இருப்பவர் குமார் ஹெக்டே. இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். '

இந்த நிலையில் குமார் ஹெக்டே மீது மும்பயைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்தப் புகாரில் குமார் ஹெக்டே தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.
 
இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட மும்பை போலீசார் தனிப்படையுடன் கர்நாடக மாநிலத்தில் குமார் ஹெக்டே வசிக்கும் ஹெக்காதஹல்லி கிராமத்துக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த குமார் ஹெக்டேவை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணைகாக குமார் ஹெக்டேவை மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.

From around the web