முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கிய பாரதிராஜா, சீமான்..!

 
Bharathiraja-Stalin

முதல்வரின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக இயக்குநர் பாரதிராஜா தமிழக முதல்வரை சந்தித்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பலரும் தங்களால் இயன்ற நிதி வரை கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவனங்கள், அரசியல், சினிமா, வெளிநாடுவாழ் தமிழர்கள், ஆசிரியர் அமைப்பினர், கடைநிலை ஊழியர்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சென்று முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அவருடன், சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்.

From around the web