ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

 
Sarpatta-Parambarai

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். காலாவிற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’.

இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம் என்பதால் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஆர்யாவுடன், துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் வரும் ஜூலை 22-ம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

From around the web