பெண்கள் என்றால் அவ்வளவு இழிவா..? டாக்டர் படத்திற்கு புதிய சிக்கல...

 
SK-Doctor

டாக்டர் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை நீக்கக்கோரி மகளிர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் திரையரங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்துத் தரப்பினரும் அந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த படம் மூலமாக தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு. வினய், தீபா, விஜே அர்ச்சனா, அர்ச்சனாவின் மகள் சாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் ஒரு காட்சிக்கு மகளிர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதாவது டாக்டர் படத்தில் விளையாட்டில் தோல்வி அடையும் ஆண் ஒருவருக்கு நைட்டி அணிவித்து தலையில் பூ வைத்து இனிமேல் உன் பெயர் கோமதி என கூறி கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த காட்சியை கண்டித்துள்ள மகளிர் அமைப்பினர் பெண்கள் என்றால் அவ்வளவு இழிவா? பெண் ஆடையை அணிந்தால் கேவலமா எனக் கூறி இந்த காட்சியை நீக்க வேண்டும் என்று படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவினருக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

From around the web