‘அண்ணாத்த’ படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த..’ ஃபர்ஸட் சிங்கள் வெளியீடு

 
Annaatthe

நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக ரஜினிக்காக பாடிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .


 

From around the web