ஐரோப்பா செல்லும் நடிகர் அஜித்..! ஏன் தெரியுமா...?

 
Valimai

இந்த ஆண்டு இறுதியில் வலிமை படம் வெளியாகும் என மோஷன் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

பின்னணி இசைக்கு பேர்போன யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்து வரும் நிலையில், நிரவ் ஷா இந்த படத்தின் ஒளிப்பதிவாளாராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வலிமை படத்தின்ஃபர்ஸ்ட் லுக்குடன் அதன் மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என மோஷன் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன நிலையில், அதனை நிறைவு செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, நடிகர் அஜித் மற்றும் வில்லனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மோதும் சண்டைக்காட்சியை படமாக்க படக்குழுவினர் கிழக்கு ஐரோப்பா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 10 நாட்களில் அங்கு செல்லும் படக்குழுவினர், 7 நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web