நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் இயக்கும் ஐஸ்வர்யா

 
Aishwarya-Dhanush

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் தற்போது புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் மகளும், தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வைராஜா வை ஆகிய 2 படங்களை இயக்கி உள்ளார்.

3 படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், சுருதிஹாசன் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தில்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் பிரபலமானது.

அதனைத் தொடர்ந்து வைராஜா வை படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் 2015-ல் வெளியானது. அதன்பிறகு ஐஸ்வர்யா படங்கள் இயக்காமல் ஒதுங்கினார்.

இந்த நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் தற்போது புதிய படம் இயக்க இருப்பதாகவும், திகில் கதையம்சம் உள்ள படமாக உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரம் வெளியாகவில்லை. இதில் தனுஷ் நடிப்பாரா அல்லது வேறு நடிகர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

From around the web