போதைப்பொருள் வழக்கில் நடிகை சோனியா அகர்வால் கைது..!

 
Sonia-Agarwal

கன்னட நடிகை சோனியா அகர்வாலை கர்நாடக போதைப்பொருள் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு கோவிந்த்புராவில், போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள், சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் நடத்தும் விருந்து நிகழ்ச்சிக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் தாமஸ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கன்னட நடிகையும், மாடல் அழகியுமான சோனியா அகர்வால், தொழில் அதிபர் பரத், டி.ஜே வச்சன் சென்னப்பா ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்திய போலீசார், போதைப்பொருட்களை கைப்பற்றினர்.

இந்நிலையில், நடிகை சோனியா அகர்வால் மற்றும் தொழிலதிபர் பரத் கைது செய்யப்பட்டுள்ளனர்.

From around the web