நிகழ் காலத்தில் வாழ்க்கையை அனுபவித்து வாழ கற்றுக்கொள்வதுதான் முக்கியம் - நடிகை பார்வதி நாயர்

 
Parvathy-Nair

கொரோனா ஊரடங்கு ஓய்வை கழிப்பது குறித்து நடிகை பார்வதி நாயர் கூறியுள்ளார்.

தமிழில் என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, உத்தமவில்லன், நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு ஓய்வை கழிப்பது குறித்து பார்வதி நாயர் கூறும்போது, “கொரோனா ஊரடங்கில் நிறைய படங்கள் பார்க்கிறேன். முன்பு பார்க்க தவறிய படங்கள் எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன். அந்த படங்களில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரமாண்ட அம்சங்கள் என்னை வியக்க வைக்கின்றன.

கதையின் நகர்வு, திரைக்கதை, வசனம் போன்றவைகளிலும் என்னை ஆர்வம் ஏற்பட செய்துள்ளன. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அனுபவிக்க வேண்டியவை. அதை ஊரடங்கு எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது.

கொரோனா பரவல் முடிந்து வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகும் இதனை மனதில் வைத்து செயல்படுவேன். நாம் எப்போதும் எதிர்காலத்தை பற்றியே சிந்திக்கிறோம். நிகழ் காலத்தை புறக்கணிக்கிறோம். நிகழ் காலத்தில் வாழ்க்கையை அனுபவித்து வாழ கற்றுக்கொள்வதுதான் முக்கியம்” என்றார்.

From around the web