கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டும் நடிகை நிவேதா பெத்துராஜ்..!

 
Niveda-Pethuraj

நடிகர் அஜித்தை போலவே நடிகை நிவேதா பெத்துராஜ் கார் பந்தயங்களில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டி வந்தார். அவரைப்போலவே நடிகை நிவேதாவும் தற்போது கார் ரேஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

‘ஒருநாள் கூத்து’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’ என தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்.  அடியே அழகே என் அழகே அடியே பாடலின் மூலம் பிரபலமான நாயகி நிவேதா பெத்துராஜ், ரேஸ் காரில் மைதானத்தில் ரவுண்டு போன புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கோவையில் ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சி முதல் நிலையை முடித்திருப்பதாகவும், சிறு வயது முதலே ஸ்போர்ட்ஸ் கார்கள் என்றால் மிகவும் விருப்பம் என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வளர்ந்த நிவேதா, கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டது. நான் 8-வது படித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது.  அங்கு ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய இரண்டாவது பெண் தான் என்றும் பெருமையாகக் கூறியுள்ளார்.

From around the web