நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

 
Meera-Mithun

நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜராகிறார்.

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் மீது எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் ஊழியரை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடர்பாக 30 பக்க குற்றப்பத்திரிகையை எழும்பூர் போலீசார் நேற்று தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜராக உள்ளார்.

From around the web