விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!!

 
விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!!

நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.

தமிழ் ரசிகர்களிடையே செல்லமாக சின்ன கலைவாணர் என்று கொண்டாடப்பட்டு வந்த நடிகர் விவேக்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். அவருக்கு கடந்த 16-ம் தேதி திடீரென நெஞ்சுவலி காரணமாக நேற்று வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 17-ம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவு பொதுமக்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவேக் மரணமடைந்த போது நடிகர் விஜய் படப்பிடிப்பிறாக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்ததால் அவரால் விவேக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமுடியவில்லை. இதற்கிடையில், படப்பிடிப்பு முடிந்து ஜார்ஜியாவில இருந்து நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பினார்.

இந்நிலையில், ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் இன்று காலை மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்றார். அங்கு நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை சந்தித்த நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.

நடிகர் விஜய்யுடன், நடிகர் விவேக் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web