சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக நடிகர் விஜய் மேல்முறையீடு

 
Vijay

நடிகர் விஜய்க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அபராதம் மற்றும் நீதிபதியின் கருத்துகள் ஆகியவற்றை நீக்க கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வணிக வரி துறை விதித்த நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரணை மேற்கொண்டார்.

அவர் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளார். நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இதனை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஜய்க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அபராதம் மற்றும் நீதிபதியின் கருத்துகள் ஆகியவற்றை நீக்க கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தனி நீதிபதியின் தீர்ப்பின் நகல் இல்லாமல் மனுவை விசாரணைக்கு பட்டியலிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  இந்த மனு, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வின் முன் வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.

From around the web