மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்..!

 
Rajini

மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார். தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய அவர் கடந்த 19-ந் தேதி தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்த ரஜினிகாந்த், அவ்வப்போது அங்குள்ள ரசிகர்களையும் சந்தித்து வந்தார். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. கிச்சை பெறும் மயோ மருத்துவமனையில் இருந்து தனது மகள் ஐஸ்வர்யாவுடன் நடிகர் ரஜினிகாந்த் நடந்துவரும் புகைப்படம் சமூக ஊடகத்தில் வெளியானது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார். இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அழைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பரிசோதனை நல்லபடி முடிந்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரத்தில் டப்பிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் நடிகர் ரஜினி டப்பிங் பணிகளை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

From around the web