கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் கார்த்தி!

 
Karthi

நடிகர் கார்த்தி முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா 2-ம் அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியம் காட்டுகின்றனர் என தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளன.

இதனால் அரசு தரப்பிலும், திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நடிகர்கள், நடிகைகள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு அவை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் கார்த்தியும் தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தையஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 

From around the web