நடிகர் கமல் நன்றாக குணமடைந்து வருகிறார்: மருத்துவமனை அறிக்கை

 
Kamal

கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நன்றாக குணமடைந்து வருகிறார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும, நடிகருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமலிடம் தொலைபேசியில் பேசி, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

Medical-report

இந்நிலையில் கமலின் உடல்நிலை குறித்து ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை இன்று (நவ.26) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web