நடிகர் அருண் விஜயின் மாமனார் உயிரிழந்தார்!

 
நடிகர் அருண் விஜயின் மாமனார் உயிரிழந்தார்!

நட்சத்திர குடும்ப வாரிசாக தமிழ் திரையுலகை வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். `என்னை அறிந்தால் ’ படத்திற்கு பிறகு மார்க்கெட் சூடுபிடித்து அதன்பின்னர் அவர் நடித்த படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன.

அருண் விஜய் மீண்டும் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட தயாரிப்பாளரும், அருண் விஜயின் மாமனார் என்.எஸ்.மோகன் தனது பாதர் டச் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலமாக நடிகர் அருண் விஜயை வைத்து வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத்தாக்க உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாக மூச்சு திணறல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்றுவந்த என்.எஸ்.மோகன் (68) இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. என்.எஸ்.மோகன் இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு அருண் விஜய் குடும்பத்தில் மட்டுமல்ல திரையுலகிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. திரைபிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web