மீண்டும் தனுஷ் படத்தில் இணையும் அமீர்

 
Dhanush-Ameer

தனுஷ் நடித்துவரும் ‘மாறன்’ படத்தில் அமீர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாறன்’. தற்போது இந்தப் படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இதனை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளன.

மாளவிகா மோகனன், மகேந்திரன், யூடியூபர் பிரசாந்த் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். விரைவில் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ‘மாறன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அமீர் நடிக்கவுள்ளார். அவருடைய காட்சிகள் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் படமாக்கப்படவுள்ளன. இதற்கு முன்பாக தனுஷ் - அமீர் கூட்டணி ‘வடசென்னை’ படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘மாறன்’ படத்தில் கவனம் செலுத்திக்கொண்டே, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் தனுஷ் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web