என்னை வைத்து படம் எடுப்பதை நிறைய பேர் தடுத்தனர் - நடிகர் சாந்தனு

 
Shanthnu

என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று நிறைய பேர் தடுத்துள்ளனர் என நடிகர் சாந்தனு கூறியுள்ளார்.

ஸ்ரீஜர் இயக்கத்தில் பாக்யராஜ் மகன் சாந்தனு, அதுல்யா ரவி நடித்துள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்ட மேலும் பலரும் இதில் நடித்து உள்ளனர். தரண் இசையமைத்து உள்ளார்.

படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் டைரக்டர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசும்போது, “முருங்கைக்காய் சிப்ஸ் என்றவுடன் முதலில் எனது படத்தில் நான் எடுத்த அந்த முருங்கைக்காய் காட்சி ஞாபகம் வருகிறது. முருங்கைகாய் காட்சி சரியாக வராமல் மூன்று முறைக்கு மேல் எடுத்தேன். இப்போது அது புகழ் பெற்றிருப்பது சந்தோஷம். சாந்தனுவின் உழைப்பை அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சி” என்றார்.

விழாவில் நடிகர் சாந்தனு பேசும்போது, “என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று நிறைய பேர் தடுத்துள்ளனர். அதையும் மீறி தயாரிப்பாளர் ரவீந்தர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை ஆரம்பித்து, இப்போது முடித்தும் விட்டார். இன்றைய சூழலில் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்து மகிழ்வது தான் முக்கியம். அதை ஸ்ரீஜர் இந்தப்படத்தில் நிறைவேற்றி உள்ளார்” என்றார்.

From around the web