கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு வரும் ‘83’ கபில்தேவ் வாழ்க்கை படம்

 
83

கபில்தேவ் வாழ்க்கையை மையமாக வைத்து ‘83’ என்ற படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோர் வாழ்க்கை சினிமா படங்களாக வெளிவந்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கையை மையமாக வைத்து ‘83’ என்ற படம் தயாராகி உள்ளது.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்திய சம்பவங்களையும், இந்த படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா மற்றும் கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீம், கிரிமானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்க் சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கபீர்கான் இயக்கி உள்ளார். 83 படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதில், “கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு வரும் 83 திரைப்படம் உலக அளவில் புயலை கிளப்பப்போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

83 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

From around the web