விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறிய சீன ராக்கெட்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா அச்சத்தில் உறைந்திருக்கும் வேளையில் சீனா புதிய ராக்கெட்டை நிறுவி விண்ணில் செலுத்தியது. விண்ணில் ஏவப்பட்ட ஒரே நிமிடத்தில் ராக்கெட் வெடித்து சிதறியது. சீனாவின் குவைசோவ் –1A என்ற ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் புதிய ராக்கெட் குவைசோவ் – 11 தயாரிக்கப்பட்டது. இந்த ராக்கெட் இரண்டு செயற்கைகோள்களுடன் பெய்ஜிங் நேரப்படி 12: 17 மணிக்கு வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ராக்கெட் தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் பயணத்தை தொடங்கிய ஒரு
 

விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறிய சீன ராக்கெட்!லக நாடுகள் அனைத்தும் கொரோனா அச்சத்தில் உறைந்திருக்கும் வேளையில் சீனா புதிய ராக்கெட்டை நிறுவி விண்ணில் செலுத்தியது. விண்ணில் ஏவப்பட்ட ஒரே நிமிடத்தில் ராக்கெட் வெடித்து சிதறியது.

சீனாவின் குவைசோவ் –1A என்ற ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் புதிய ராக்கெட் குவைசோவ் – 11 தயாரிக்கப்பட்டது. இந்த ராக்கெட் இரண்டு செயற்கைகோள்களுடன் பெய்ஜிங் நேரப்படி 12: 17 மணிக்கு வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ராக்கெட் தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் பயணத்தை தொடங்கிய ஒரு நிமிடத்தில் நிலை தடுமாறிய குவைசோவ் -11 ராக்கெட் வானில் அந்தரத்தில் அலைபாய்ந்து வெடித்து சிதறியது. இந்த ராக்கெட் சூரியனின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நிமிடத்தில் ராக்கெட் வெடித்து சிதறியதற்கான காரணத்தை கண்டறிய சீன விண்வெளி மையத்தின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

A1TamilNews.com

From around the web