இனி நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை!மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!

இந்திய சீனா எல்லைப்பகுதிகளில் ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனாவின் இந்த போக்கை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புக்குரல்கள் உருவாகியுள்ளன. அந்த வரிசையில் சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் முற்றிலும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷமும் இந்தியாவில் எழுந்து வருகிறது. இந்நிலையில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர்
 

இனி நெடுஞ்சாலை  திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை!மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!ந்திய சீனா எல்லைப்பகுதிகளில் ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் இந்த போக்கை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புக்குரல்கள் உருவாகியுள்ளன. அந்த வரிசையில் சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் முற்றிலும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷமும் இந்தியாவில் எழுந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்தியாவில் சாலை கட்டுமான பணிகளில் கூட்டு திட்டங்களில், சீனா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இதற்காக மத்திய அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது.

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களை தடை செய்யவும், இந்திய நிறுவனங்களுக்கு விதிகளை தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றிலும் இனி சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web