எல்லைப் பகுதியை தன்னிச்சையாக மாற்றத் துடிக்கும் சீனாவின் போக்கு கண்டிக்கத்தக்கது! ஜப்பான் குற்றச்சாட்டு!

இந்தியா சீனா எல்லைப்பகுதிகளில் மே முதல் வாரத்தில் இருந்தே பதற்றம் நிலவி வந்தது. ஜூன் 15 ந்தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்ததில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீன வீரர்கள் 43 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இதையடுத்து பதட்டத்தை தணிக்கும் வகையில், ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு படைகளை விலக்கிக் கொள்ள
 

எல்லைப் பகுதியை தன்னிச்சையாக மாற்றத் துடிக்கும் சீனாவின் போக்கு கண்டிக்கத்தக்கது! ஜப்பான் குற்றச்சாட்டு!ந்தியா சீனா எல்லைப்பகுதிகளில் மே முதல் வாரத்தில் இருந்தே பதற்றம் நிலவி வந்தது. ஜூன் 15 ந்தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்ததில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீன வீரர்கள் 43 பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இதையடுத்து பதட்டத்தை தணிக்கும்  வகையில், ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.

இந்நிலையில், இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. எல்லையில் ஏற்கெனவே கடை பிடிக்கப்பட்டு வரும் நிலையை தன்னிச்சையாக மாற்றும் சீனாவின் முயற்சியை எதிர்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக இந்திய வெளியுறவுத் துறை செயலருக்கும், ஜப்பான் தூதருக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. அப்போது, கிழக்கு லடாக் பகுதியின் இப்போதைய நிலைமை குறித்தும், எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் பேசப்பட்டது.

இந்தச் சந்திப்புக்குப் பின்னா் கிழக்கு லடாக் எல்லை பகுதி பிரச்னைக்கு அமைதியான முறையில் தீா்வு காணும் இந்தியாவின் கொள்கைகள் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான  முறையில் தீா்வு காணப்படும் என்று ஜப்பானும் நம்புவதாகவும், ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையை தன்னிச்சையாக மாற்றும் சீனாவின் முயற்சியை ஜப்பான் வன்மையாக கடுமையாக எதிர்ப்பதாகவும் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

A1TamilNews.com

 

 

 

From around the web