கொரோனா எல்லாம் கிடையாது… உற்சாகமாய் உற்பத்தியைத் துவங்கிய சீன தொழிற்சாலைகள்!

சீனாவில் தொடங்கி தற்போது 200நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா வைரஸ் . உலக நாடுகள் அனைத்தும் தமது தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. அமெரிக்கா உட்பட அனைத்து வர்த்தக நாடுகளும் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து, கொரோனா குறித்து கலங்கி வருகிறது. இந்த விபரீத வைரஸ் விளையாட்டை ஆரம்பித்து வைத்த சீனாவில் வைரசின் பாதிப்பு குறைய தொடங்கியிருக்கிறது. மெல்ல, மெல்ல இயல்பு வாழ்க்கை சீனாவில் திரும்பத் தொடங்கியுள்ளது. தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெறத் துவங்கியுள்ளன.
 

கொரோனா எல்லாம் கிடையாது… உற்சாகமாய் உற்பத்தியைத் துவங்கிய சீன தொழிற்சாலைகள்!சீனாவில் தொடங்கி தற்போது 200நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா வைரஸ் .

உலக நாடுகள் அனைத்தும் தமது தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. அமெரிக்கா உட்பட அனைத்து வர்த்தக நாடுகளும் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து, கொரோனா குறித்து கலங்கி வருகிறது.

இந்த விபரீத வைரஸ் விளையாட்டை ஆரம்பித்து வைத்த சீனாவில் வைரசின் பாதிப்பு குறைய தொடங்கியிருக்கிறது. மெல்ல, மெல்ல இயல்பு வாழ்க்கை சீனாவில் திரும்பத் தொடங்கியுள்ளது.

தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெறத் துவங்கியுள்ளன. சீனாவில் அடியோடு முடங்கிப் போன உள்ளூர் போக்குவரத்து தற்போது 21% வரை அதிகரித்துள்ளது. அத்தோடு உள்நாட்டு வர்த்தகமும் சீரடையத் துவங்கியுள்ளது.

மோட்டார் உற்பத்தி தொழிற்சாலைகளான பி எம் டபிள்யூ, ஃபியட், ஃபோர்ட், ஃபாக்ஸ்கான், ஹோண்டா, நிசான், டெஸ்லா, டொயோட்டா, வோக்ஸ்வாகன் ஆகிய தொழிற்சாலைகள் வாகன உற்பத்தியை மீண்டும் தொடங்கி இருக்கிறது.

விரைவில் சீனாவில் இயல்பு வாழ்க்கை துவங்கி பொருளாதாரத்தில் உயரும் என அந்நாட்டு பொருளாதார வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web