இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் அத்து மீறும் சீனா! அமெரிக்கா எச்சரிக்கை!

கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சீனா இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் எல்லை மீறத் துவங்கியுள்ளது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் எல்லைப் பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாகவும், லடாக் பகுதி யூனியன் பிரதேசமாகவும் செயல்பட்டு வருகிறது. அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மூலம் இந்தியாவிற்குள் நுழையும் சீனாவின் திட்டம் இந்திய வீரர்களால் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 

இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் அத்து மீறும்  சீனா! அமெரிக்கா எச்சரிக்கை!கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சீனா இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் எல்லை மீறத் துவங்கியுள்ளது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் எல்லைப் பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது.

இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாகவும், லடாக் பகுதி யூனியன் பிரதேசமாகவும் செயல்பட்டு வருகிறது.

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மூலம் இந்தியாவிற்குள் நுழையும் சீனாவின் திட்டம் இந்திய வீரர்களால் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. லடாக் பகுதியில் சாலை அமைக்கவும் சீனா ஆட்சேபித்து வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக சண்டையுடன், கொரோனா பிரச்சனைக்கு சீனா தான் காரணம் என நேரடியாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார் .

இதனால் அமெரிக்கா சீனா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஆலிஸ் இந்திய எல்லை பகுதியில் சீனா தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதை அமெரிக்கா சற்றும் பொறுக்காது எனவும், சீனா அதிகாரம் செய்ய முயற்சித்தால் அமெரிக்காவும் பதிலடி காட்டத் தயங்காது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் பலமுறைகள் சீனா, இந்தியா மோதல் உருவான போதும் அமெரிக்கா குரல் கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web