‘அம்மா அப்பாவை பத்திரமா பாத்துக்குங்க.. இல்லாட்டி ஜெயில் தான்’!

பாட்னா: வயதான அம்மா அப்பா வை அனாதைகளாக கைவிடும் பிள்ளைகளுக்கு ஜாமினில் வெளி வர முடியாத கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பெற்றோர்களை உடன் வைத்துக் கொண்டு தேவையான வசதிகளைச் செய்து தராமல் முதியோர் இல்லங்களில் விடும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், வயதான பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை என்ற சட்டத்தை பீகார் சட்டமன்றத்தில் இயற்றி உள்ளார்கள். இதன் படி பிள்ளைகள் மீது பெற்றோர்கள் புகார் அளித்தால், பிள்ளைகள் மீது
 

‘அம்மா அப்பாவை பத்திரமா பாத்துக்குங்க.. இல்லாட்டி ஜெயில் தான்’!பாட்னா: வயதான அம்மா அப்பா வை அனாதைகளாக கைவிடும் பிள்ளைகளுக்கு ஜாமினில் வெளி வர முடியாத கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களை உடன் வைத்துக் கொண்டு தேவையான வசதிகளைச் செய்து தராமல் முதியோர் இல்லங்களில் விடும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், வயதான பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை என்ற சட்டத்தை பீகார் சட்டமன்றத்தில் இயற்றி உள்ளார்கள்.

இதன் படி பிள்ளைகள் மீது பெற்றோர்கள் புகார் அளித்தால், பிள்ளைகள் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்படும். விசாரணை நடத்தி சிறை தண்டனையும் வழங்கப்படும்.

இந்தியாவிலேயே பெற்றோர்களுக்கு ஆதரவாக இத்தகைய சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது பீகாரில் தான் என்று தெரிகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web