ஆப்பிள், அமேசான், சாம்சங் உள்பட 13 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்!

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தாக்கத்தால் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்து வெளியேறிய 17 நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதே போன்று தமிழகத்தில் தங்கள் முதலீடுகளைச் செய்ய வேண்டும் எனவும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் எனவும் ஆப்பிள், சாம்சங்,அமேசான் நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் நேரடியாகக் கடிதம் மூலம்
 

ஆப்பிள், அமேசான், சாம்சங் உள்பட 13 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்!லக நாடுகளில் பரவி வரும் கொரோனா தாக்கத்தால் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன.

அந்த வகையில் சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்து வெளியேறிய 17 நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இதே போன்று தமிழகத்தில் தங்கள் முதலீடுகளைச் செய்ய வேண்டும் எனவும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் எனவும் ஆப்பிள், சாம்சங்,அமேசான் நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் நேரடியாகக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் மூலமே ஏற்கனவே இருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய முதலீடுகள் செய்யப்படுவதில் தமிழகத்தில் அமைந்துள்ள சாதகமான நிலைகளையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார் முதல்வர்.

கோரிக்கையை ஏற்று முதலீடு செய்யும் பட்சத்தில் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான ஆதரவை தமிழக அரசு பெற்றுத் தரும் எனவும் உறுதி பட தெரிவித்துள்ளார் எடப்பாடி.

A1TamilNews.com

From around the web