ப.சிதம்பரம் 106 நாட்களுக்கு பிறகு!

அன்னிய முதலீட்டில் முறைகேடு சம்பந்தப்பட்ட வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற, அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ல் சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்யப்பட்டார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மீண்டும் பணபரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கோரப்பட்ட ஜாமீன்
 

ப.சிதம்பரம் 106 நாட்களுக்கு பிறகு!ன்னிய முதலீட்டில் முறைகேடு சம்பந்தப்பட்ட வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற, அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ல் சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மீண்டும் பணபரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கோரப்பட்ட ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஆர்.பானுமதி,ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. வழக்கு சம்பந்தமாக சிதம்பரம் பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கவோ முயற்சிக்க கூடாது.
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அனுமதி இல்லாமல் பயணம் மேற்கொள்ளக்கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் 2 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

இதனை அடுத்து ப. சிதம்பரம் 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியே வர இருக்கிறார்.

https://www.A1TamilNews.com

From around the web