டெல்லியை தொடர்ந்து சென்னையை அட்டாக் செய்த காற்று மாசு!

சென்னை: தம்மை நம்பி வந்தோரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சென்னையின் நுரையீரல் காற்று மாசால் திணறி வருகிறது. கடந்த 3 நாள்களாக நிலவும் பனி மற்றும் காற்று மாசு காரணமாக காலையிலும் மாலையிலும் சென்னை நகரம் புகைமூட்டம் சூழ்ந்தது போல காட்சியளிக்கிறது. டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 3 நாள்களாக நிலவும் பனி மற்றும் காற்று மாசு காரணமாக காலையிலும் மாலையிலும் சென்னை நகரம் புகைமூட்டம் சூழ்ந்தது போல் காட்சியளிக்கிறது. வேளச்சேரி,
 

டெல்லியை தொடர்ந்து சென்னையை அட்டாக் செய்த காற்று மாசு!சென்னை: தம்மை நம்பி வந்தோரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சென்னையின் நுரையீரல் காற்று மாசால் திணறி வருகிறது. கடந்த 3 நாள்களாக நிலவும் பனி மற்றும் காற்று மாசு காரணமாக காலையிலும் மாலையிலும் சென்னை நகரம் புகைமூட்டம் சூழ்ந்தது போல காட்சியளிக்கிறது.

டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 3 நாள்களாக நிலவும் பனி மற்றும் காற்று மாசு காரணமாக காலையிலும் மாலையிலும் சென்னை நகரம் புகைமூட்டம் சூழ்ந்தது போல் காட்சியளிக்கிறது. வேளச்சேரி, ஆலந்தூர், மணலி உள்ளிட்ட 4 இடங்களில் காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. அதன்படி காற்றின் தரக்குறியீடு மணலியில் 320ஆகவும், வேளச்சேரியில் 299ஆகவும், ஆலந்தூரில் 285ஆகவும் உள்ளது.

தரக்குறியீடு 50-க்கும் கீழ் இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க ஏற்ற காற்று. இதுபோன்ற தரமற்ற காற்றை சுவாசிப்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கும் மருத்துவர்கள், பாதிப்பில் இருந்து தப்ப மாஸ்க் அணியும்படி வலியுறுத்துகின்றனர். மழை பெய்தால் மட்டுமே காற்று மாசு குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web