சென்னையிலிருந்து ஜப்பானுக்கு நேரடி விமான சேவை! அமெரிக்காவுக்கு புதிய வழித்தடம்!!

சென்னையிலிருந்து ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு நேரடி விமான சேவை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் (ஏஎன்ஏ) விமான நிறுவனம் இந்த சேவையை தொடங்கியுள்ளது. தென் இந்தியாவில் குறிப்பாக சென்னையைச் சுற்றிலும் தொழில் வளர்ச்சி வேகமாக நடைபெற்று வருவதாலும் ஜப்பான் நிறுவனங்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாலும், நேரடி விமான சேவை அவசியமாகிறது. நேரடி விமான சேவை மூலம் ஜப்பானுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஏஎன்ஏ விமான நிறுவனத்தின் அதிகாரி யாசுயுகி டொமிட்சு (Yasuyuki
 

சென்னையிலிருந்து ஜப்பானுக்கு நேரடி விமான சேவை! அமெரிக்காவுக்கு புதிய வழித்தடம்!!சென்னையிலிருந்து ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு நேரடி விமான சேவை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் (ஏஎன்ஏ) விமான நிறுவனம் இந்த சேவையை தொடங்கியுள்ளது. தென் இந்தியாவில் குறிப்பாக சென்னையைச் சுற்றிலும் தொழில் வளர்ச்சி வேகமாக நடைபெற்று வருவதாலும் ஜப்பான் நிறுவனங்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாலும், நேரடி விமான சேவை அவசியமாகிறது. நேரடி விமான சேவை மூலம் ஜப்பானுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஏஎன்ஏ விமான நிறுவனத்தின் அதிகாரி யாசுயுகி டொமிட்சு (Yasuyuki Tommitsu) கூறியுள்ளார்.

டெல்லி, மும்பையிலிருந்து டோக்கியோவுக்கு நேரடி சேவை இருப்பதாகவும் இது இந்தியாவிலிருந்து இயக்கப்படும் மூன்றாவது நேரடி சேவை என்றும் மற்றுமொரு அதிகாரி மிட்சுவோ டொமிடா( Mitsuo Tomita) கூறியுள்ளார். சென்னையிலிருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கும் இந்த நேரடி விமான சேவை வசதியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரவு 8:30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, ஜப்பான் நேரப்படி காலை 8 மணி அளவில் டோக்கியோ சென்றடைகிறது. அங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் டிசி, ஹுஸ்டன் நகரங்களுக்கு செல்வதற்கு காலை 10 மணி அளவில் அடுத்த விமான சேவை உள்ளது. சென்னையில் இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கு நியூயார்க் நகரத்தில் வந்தடைய முடியும்.

சியாட்டல், சான் ஃப்ரான்சிஸ்கோ, சான் ஓசே, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு செல்பவர்கள் மாலை வரை டோக்கியோ விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருக்கும்.  ஏஎன்ஏ விமான நிறுவனம், யுனைடெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட  “ஸ்டார் அலையன்ஸ்” குழுவில் பங்கேற்கிறது.

சென்னை – டோக்கியோ ஏஎன்ஏ விமான சேவை மூலம், அமெரிக்கா  செல்வதற்கும் புதிய வழித்தடம் அமைந்துள்ளது என்று கூறலாம்.

https://www.A1TamilNews.com

 

From around the web