மும்பையை பழி தீர்த்து 4வது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆகுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஹைதராபாத்: 8 அணிகள் இடையிலான 12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மார்ச் 23–ந் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் முறையே 5 முதல் 8–வது
 

மும்பையை பழி தீர்த்து 4வது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆகுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?ஹைதராபாத்: 8 அணிகள் இடையிலான 12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மார்ச் 23–ந் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் முறையே 5 முதல் 8–வது இடங்களைப் பிடித்து வெளியேறின.

‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டம் கடந்த 7–ந் தேதி தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

விசாகப்பட்டினத்தில் 8–ந் தேதி நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை தோற்கடித்து 2–வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி கண்ட ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வெளியேறியது.

விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேற்று ஓய்வு நாளாகும்.

இன்று இறுதிப் போட்டி

ஐபிஎல் கோப்பையை மீண்டும் வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018–ம் ஆண்டுகளிலும்), மும்பை இந்தியன்ஸ் (2013, 2015, 2017–ம் ஆண்டுகளிலும்) அணிகள் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. 4–வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதிக்க போகும் அணி எது? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

2 ஆண்டு தடையை சந்தித்த சென்னை அணி 10–வது முறையாக இந்த போட்டியில் களம் கண்டு அதில் 8–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்து சாதனை படைத்து இருக்கிறது. மும்பை அணி 5–வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

சென்னை பதிலடி கொடுக்குமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடினாலும், மும்பை அணிக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் 37 ரன்கள் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அத்துடன் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்திலும் மும்பையிடம் வீழ்ந்தது. மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி தொடர்ச்சியாக (கடந்த ஆண்டு ஒரு ஆட்டம் உள்பட) 4 தோல்வியைச் சந்தித்து இருக்கிறது.

முந்தைய தோல்விகளுக்கு சென்னை அணி இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

– வணக்கம் இந்தியா

From around the web