கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் கூலாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்! #IPL2019 #CSKvKKR

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். சுனில் நரேன் 2 ரன்னிலும், நிதிஷ் ரானா 21 ரன்னிலும், ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கிறிஸ்
 

கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் கூலாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்! #IPL2019 #CSKvKKRகொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர்.

சுனில் நரேன் 2 ரன்னிலும், நிதிஷ் ரானா 21 ரன்னிலும், ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கிறிஸ் லின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 51 பந்துகளில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 82 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 18 ரன்னிலும், ஆண்ட்ரு ரஸ்ஸல் 10 ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது.

சென்னை அணி சார்பில் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

162 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு வீரர் பாப் டு ப்ளெசிஸ் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அம்பத்தி ராயுடுவோ 5 ரன்களில் வீழ்ந்தார். மறுபக்கம் சுரேஷ் ரெய்னா உறுதியாக நின்று ஆடினார். கேப்டன் டோணி 16 ரன்களில் அவுட்டாக, ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா, ரெய்னாவுடன் இணைந்து ரன்களை விளாசினார். அவர் 17 ரன்களில் 31 ரன்கள் அடித்தார். 2 பந்துகள் மிச்சமிருக்கையில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாடத்தில் வெற்றியை ருசித்தது.

கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லா, சுனில் நரேன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குர்னே ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

– வணக்கம் இந்தியா

From around the web