வாட்சன் அதிரடி… சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி! #CSKvsSRH

சென்னை: ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 5 ஆக இருக்கும்போது பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.
 

சென்னை: ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 5 ஆக இருக்கும்போது பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டே பொறுப்புடன் விளையாடினார்.

வார்னரும், பாண்டேவும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். வார்னர் 57 ரன்னில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து விஜய் சங்கர் இறங்கினார். மறுபுறம் மணீஷ் பாண்டே அதிரடியாக ஆடினார். அணியின் எண்ணிக்கை 167 ஆக இருக்கும்போது விஜய் சங்கர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. டு பிளிசிஸ் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். வாட்சனுடன் ரெய்னா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். ரெய்னா 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஸ்டம்ப்பிங்கில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த ராயுடு நிதானமாக விளையாடினார். எதிர் முனையில் வாட்சன் வெளுத்து வாங்கினார். அவர் 52 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார். இதில் 6 சிக்சர்களும் 9 பவுண்டரிகளும் அடங்கும். 1 பந்து மீதம் இருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார், ரஷித் கான், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளைப் பெற்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலில் உள்ள சென்னை அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது.

இன்றைய ஆட்டம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், சின்னசாமி ஸ்டேடியம் பெங்களூரு, இரவு 8 மணி.

– வணக்கம் இந்தியா

From around the web