6 போட்டிகள்… 5 வெற்றிகள்… கலக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சாஹர், ஹர்பஜன் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. கொல்கத்தா அணி வீரர்கள் கிறிஸ் லின் 0 ரன், சுனில் நரின் 6 ரன், தினேஷ் கார்த்திக் 19 ரன், ராபி உத்தப்பா
 

6 போட்டிகள்… 5 வெற்றிகள்… கலக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சாஹர், ஹர்பஜன் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா.

கொல்கத்தா அணி வீரர்கள் கிறிஸ் லின் 0 ரன், சுனில் நரின் 6 ரன், தினேஷ் கார்த்திக் 19 ரன், ராபி உத்தப்பா 11 ரன், சுப்மான் கில் 9 ரன், நிதிஷ் ராணா 0 ரன், பியூஸ் சாவ்லா 8 ரன், குல்தீப் யாதவ் 0 ரன், பிரசித் கிருஷ்ணா 0 ரன், என வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸ்செல் 50 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 108 ரன்களை எடுத்தது.

சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் 3 விக்கெட், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்,  இம்ரான் தாஹிர் 2 விக்கெட், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை (111 ரன்கள்) எட்டியது.  இதன் மூலம் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. 

சென்னை அணியில் அதிகபட்சமாக டு பிளிஸ்சிஸ் 43 ரன்கள், அம்பத்தி ராயுடு 21 ரன்கள், எடுத்தனர். கொல்கத்தா அணியில் சுனில் நரின் 2 விக்கெட், பியூஸ் சாவ்லா 1 விக்கெட் வீழ்த்தினர்.

6 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு இது 5வது வெற்றி. இந்த வெற்றியின் மூலம், 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது சென்னை அணி.

இன்றைய ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவென் பஞ்சாப், மும்பை.

– வணக்கம் இந்தியா

From around the web