அதிரடியாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!

மும்பை: 11வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அட்டகாசமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை 3வது முறையாகக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். ஹைதரபாத் அணியின் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாகக்
 

மும்பை: 11வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அட்டகாசமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை 3வது முறையாகக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். ஹைதரபாத் அணியின் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். 5 ரன்கள் எடுத்திருந்த போது கோஸ்வாமி ஆட்டமிழந்தார். தொடர்ந்து தவான் 26, வில்லியம்சன் 47 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்தவர்களில் யூசுப் பதான் 45 ரன்கள் எடுத்தார். ஷகிப் அல் அசன் 25 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி 178 ரன்களை எடுத்தது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி ஆட்டத்தைத் தொடங்கியது. டு பிளெசிஸ் 10 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், மறுமுனையில் அதிரடியாக ஆடினார் வாட்சன். இன்னொரு பக்கம் சுரேஷ் ரெய்னாவும் பட்டாசு கொளுத்தினார். 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரெய்னா அவுட்டாக, அம்பத்தி ராயுடு வந்தார். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாணவேடிக்கைக் காட்டினார் வாட்சன். 51 பந்துகளில் அவர் சதமடித்தார். 18.3 ஓவரில் 2 விக்கெட்டுளை இழந்து 181 ரன்கள் எடுத்து வெற்றிக்கனி பறித்தது சென்னை.

இதன் மூலம் 3வது முறையாக ஐபிஎல் சாம்பியனானது டோணி தலைமையிலான சென்னை. 2 ஆண்டு தடைக்குப் பிறகு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், எப்போது வந்தாலும் தானே கிங் என்பதை நிரூபித்துள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web