சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் தோல்வி… கடும் அதிருப்தியில் ரசிகர்கள்!

மும்பை: 12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும் மோதின. டாஸ் வென்ற சென்னை
 

மும்பை: 12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும் மோதின.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மும்பை அணியின் ரோகித் சர்மாவும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். தடுமாற்றத்துடன் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 3-வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தது. டி காக் 4 ரன்னில், தீபக் சாஹரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அடித்து ஆடினார். ஆனால் ரோஹித் சர்மா, யுவராஜ் சிங் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. குருணல் பாண்ட்யா 42 ரன்களில் (32 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற்றப்பட்டார். அரைசதத்தை கடந்த சூர்யகுமார் யாதவ் 59 ரன்களில் (43 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

கடைசி இரு ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யாவும், கீரன் பொல்லார்ட்டும் கை கோர்த்து சரமாரியாக விளாசினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் மும்பை பேட்ஸ்மேன்கள் 67 ரன்களை எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 25 ரன்களுடனும் (8 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), பொல்லார்ட் 17 ரன்களுடனும் (7 பந்து, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

அடுத்து 171 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அம்பத்தி ராயுடு (0 ரன்), ஷேன் வாட்சன் (5 ரன்) இருவரும் மும்பை வேகப்பந்து வீச்சில் காலியானார்கள். அதைத் தொடர்ந்து வந்த சுரேஷ் ரெய்னா 16 ரன்களில் வெளியேறினார். தல டோணி காப்பாற்றுவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம். அவர் 21 பந்துகளில் 12 ரன்களே எடுத்து அவுட்டானார். கேதர் ஜாதவின் 58 ரன்கள் குவித்தும் பலனில்லை.

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணியால் 8 விக்கெட்டுக்கு 133 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மலிங்கா, ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டுகளும், பெரேன்டோர்ப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தனது முதல் 3 ஆட்டங்களில் வரிசையாக வெற்றிப் பெற்ற சென்னை அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். சென்னை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இந்த ஆட்டம் அமைந்தது.

இன்றைய ஆட்டம்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி கேப்பிடல்ஸ், இடம்: டெல்லி, இரவு 8 மணி.

– வணக்கம் இந்தியா

From around the web