கேந்திரிய வித்தியாலயா துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை மாணவிக்கு தங்கம்.. தேசியப் போட்டிக்கு தேர்வு!

மதுரை: தமிழ்நாடு கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் பங்கேற்றே மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் 19 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில்(10 மீட்டர் பீப் சைட் ஏர் ரைஃபிள்), சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பொ.அனலினா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சென்னையில் அண்ணாநகர் கேந்திரிய வித்தியாலாவில் +2 படித்து வரும் பொ.அனலினா 14 வயது முதலாகவே துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்று வருகிறார். தற்போது நடந்துள்ள போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய அளவில் ஜூன் இறுதியில்
 

கேந்திரிய வித்தியாலயா துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை மாணவிக்கு தங்கம்.. தேசியப் போட்டிக்கு தேர்வு!மதுரை: தமிழ்நாடு கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் பங்கேற்றே மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் 19 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில்(10 மீட்டர் பீப் சைட் ஏர் ரைஃபிள்), சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பொ.அனலினா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

சென்னையில் அண்ணாநகர் கேந்திரிய வித்தியாலாவில் +2 படித்து வரும் பொ.அனலினா 14 வயது முதலாகவே துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்று வருகிறார்.

தற்போது நடந்துள்ள போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய அளவில் ஜூன் இறுதியில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். தேசிய அளவில் நடக்கும் போட்டியிலும் தங்கம் பெறுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள அனலினா படிப்பிலும் படு சுட்டி. எதிர்காலத்தில், ஐ.எப்.எஸ்.தேர்வில் வெற்றி பெற்று மக்கள் பணி ஆற்றுவதே லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.

அனலினாவின் தந்தை பொன்துரை மத்திய அரசில் தொழிலாளர் உதவி கமிஷனராகப் பணியாற்றி வருகிறார். தாயார் கணிணித் துறையில் வல்லுனர். மகள், மகன் என்று பாகுபாடு இல்லாமல் தான் இருவரையும் சமமாகவே நடத்துகிறோம். எங்கள் விருப்பங்களை திணிக்காமல், அவரவர் விரும்பும் துறைகளில் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருப்பது தான் எங்கள் விருப்பமும் ஆகும் என்கிறார்கள்.

 

From around the web