கொரோனா குறித்து சென்னை மாநகராட்சி அவசர எச்சரிக்கை நோட்டீஸ்!

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் குறிப்பிட்ட முகவரிக்கு சென்று வந்த நபருக்கு கொரானோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த கட்டிடத்திற்கு சென்று வந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முறைப்படி சிகிச்சை
 

கொரோனா குறித்து சென்னை மாநகராட்சி அவசர எச்சரிக்கை நோட்டீஸ்!கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.

பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் குறிப்பிட்ட முகவரிக்கு சென்று வந்த நபருக்கு கொரானோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த கட்டிடத்திற்கு சென்று வந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முறைப்படி சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இதோ முகவரி:
விசா அப்ளிகேஷன் சென்டர்,
குட் ஷெப்பர்ட் பில்டிங்,
நெ.82, முதல் தளம்,
கோடம்போக்கம் பிரதான சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை – 34
பாதிப்பு இருக்கும் நபர் சென்று வந்த தேதி மார்ச்15.

மேற்கண்ட முகவரிக்கு சென்று வந்தவர்கள் அரசிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

A1TamilNews.com

From around the web