கொரோனாவைக் கட்டுப்படுத்த நிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசு! முதல்வர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகளும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பு பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இருந்தாலும் இதுவரை நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும், அதற்கேற்ற செயல்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக
 

கொரோனாவைக் கட்டுப்படுத்த நிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசு! முதல்வர்  குற்றச்சாட்டு!மிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகளும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பு பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இருந்தாலும் இதுவரை நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும், அதற்கேற்ற செயல்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருவதால் ஜிஎஸ்டி வருவாய் பெருமளவில் குறைந்து வருவதாகவும், அதற்கு அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web