தமிழகத்தில் கொரோனா தடுப்பு முறைகள் குறித்து மத்தியக் குழு ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.இது வரை தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.26 லட்சம் பேர். தற்போது படிப்படியாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பாதிப்பை குறைக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார குழு சென்னை வந்துள்ளது. இந்தக் குழு
 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முறைகள் குறித்து மத்தியக் குழு  ஆய்வு!மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.இது வரை தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.26 லட்சம் பேர்.

தற்போது படிப்படியாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பாதிப்பை குறைக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார குழு சென்னை வந்துள்ளது.

இந்தக் குழு கொரோனா நோய்த் தொற்றை தடுக்க தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், நோய்த் தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தேனி, ராணிப்பேட்டை, ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இன்றும் சென்னையின் மற்ற பகுதிகளில் ஆய்வு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web