பொள்ளாச்சியில் சிபிஐ அதிகாரிகள்.. பாலியல் வன்முறை வழக்கு சூடுபிடிக்கிறதா?

பொள்ளாச்சி: பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்ட பிறகு, பொள்ளாச்சியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பொள்ளாச்சியில் நூற்றுக்கணகான இளம் பெண்கள், மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்த வழக்கு, பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையை விரைவு படுத்தவில்லையா என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப்பட்டது. தற்போது சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் பல இடங்களில் பலரிடம் விசாரணை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இது
 
பொள்ளாச்சி: பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்ட பிறகு, பொள்ளாச்சியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
பொள்ளாச்சியில் நூற்றுக்கணகான இளம் பெண்கள், மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்த வழக்கு, பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
 
சிபிஐ விசாரணையை விரைவு படுத்தவில்லையா என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப்பட்டது. தற்போது சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் பல இடங்களில் பலரிடம் விசாரணை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
 
இது வரையிலும் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி வந்த சிபிஐ அதிகாரிகள், அரசு மருத்துவமனையில் வெளி, உள் நோயாளிகள் பட்டியலைப் பெற்றுச் சென்றுள்ளனர். சப் கலெக்டர், தாலுகா அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கும் போய் உள்ளனர்.
 
சபரிராஜனின் வீட்டுக்குச் சென்று அவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். மாக்கினாம் பட்டி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடமும் விசாரணை நடந்துள்ளதாகத் தெரிகிறது. இன்னும் பல இடங்களிலும் விசாரணை நடப்பதாகக் கூறப்படுகிறது.
 
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், பொள்ளாச்சி வழக்கு விரைவு பெற்று குற்றவாளிகளுக்கு சீக்கிரமே தண்டனை கிடைக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.
 
– வண்க்கம் இந்தியா

From around the web